டாஸ்மாக் பணியாளர்களுக்கு அரசு துறைகளில் நிரந்தர பணி வழங்க வேண்டும் தூத்துக்குடியில் நடந்த மாநாட்டில் தீர்மானம்

டாஸ்மாக் பணியாளர்களுக்கு அரசு துறைகளில் நிரந்தர பணி வழங்க வேண்டும் என்று தூத்துக்குடியில் நடந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2017-05-31 20:30 GMT

தூத்துக்குடி,

டாஸ்மாக் பணியாளர்களுக்கு அரசு துறைகளில் நிரந்தர பணி வழங்க வேண்டும் என்று தூத்துக்குடியில் நடந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநாடு

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநாடு தூத்துக்குடியில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று நடந்தது. மாநாட்டுக்கு மாநில துணைத்தலைவர் நெப்போலியன் தலைமை தாங்கினார். ராஜ்குமார், முத்துகிருஷ்ணன், அரவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராஜபாண்டியன் வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் பெரியசாமி கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தார். மாநில பொதுச்செயலாளர் தனசேகரன் பேசினார்.

தீர்மானங்கள்

மாநாட்டில், தமிழக அரசின் கொள்கை முடிவின்படியும், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படியும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் 17 ஆயிரம் பணியாளர்கள் வேலை இழந்து உள்ளனர். பொதுமக்களிடம் பூரண மதுவிலக்கு கோரிக்கை வலுப்பெற்று தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. அரசியல் கட்சிகள், சில அமைப்புகள் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி போராடி வருகின்றனர். இதனால் புதிதாக மதுக்கடைகளை திறக்க முடியாத நிலை உருவாகி உள்ளது. இதனால் வேலை இழந்த டாஸ்மாக் பணியாளர்களுக்கு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களில் நிரந்தர பணியிடம் வழங்க வேண்டும். பணிமூப்பு அடிப்படையில் டாஸ்மாக் நிர்வாகம் பணியாளர்களுக்கு மாற்றுப்பணி உத்தரவு வழங்க வேண்டும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் முன்னாள் எம்.பி. அப்பாத்துரை, முன்னாள் எம்.எல்.ஏ. சுடலையாண்டி, மாநில ம.தி.மு.க. மீனவர் அணி செயலாளர் நக்கீரன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் மாரிசெல்வம், துறைமுக ஏ.ஐ.டி.யூ.சி. பால்சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்