கடந்த 4 மாதங்களில் மட்டும் 852 விவசாயிகள் தற்கொலை

கடந்த 4 மாதங்களில் மட்டும் மராட்டியத்தில் 852 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2017-05-18 22:36 GMT
மும்பை

கடந்த 4 மாதங்களில் மட்டும் மராட்டியத்தில் 852 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தொடரும் சோகம்

நாட்டிலேயே மராட்டியத்தில் அதிகளவு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். விவசாயிகள் தற்கொலையை தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சோகம் தொடர்ந்து வருகிறது.

விவசாயிகளை காப்பாற்ற பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என பா.ஜனதாவின் கூட்டணியில் உள்ள சிவசேனா உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் அரசை வலியுறுத்தி வருகின்றன. எனினும் மாநில அரசு இந்த விவகாரத்தில் பிடிவாதமாக உள்ளது.

852 விவசாயிகள் தற்கொலை


இந்தநிலையில் விவசாயிகள் தற்கொலை குறித்து அரசின் தகவல்கள் அதிர்ச்சியை தருகின்றன. இதில் கடந்த 4 மாதத்தில்(ஜனவரி முதல் ஏப்ரல் வரை) மட்டும் மாநிலம் முழுவதும் 852 விவசாயிகள் தற்கொலை செய்து தங்கள் உயிரை மாய்த்துள்ளனர். அதாவது கடந்த 4 மாதத்தில் தினசரி சராசரியாக 7 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.

அதிகபட்சமாக முதல்- மந்திரியின் விதர்பா மண்டலத்தில் 409 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். மரத்வாடா மண்டலத்தில் 291, மாநிலத்தின் வடக்கு பகுதியில் 132, மேற்கில் 19, கொங்கனில் ஒரு விவசாயியும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 

மேலும் செய்திகள்