ஆர்ப்பாட்டம்

காஞ்சீபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டத்திற்குட்பட்ட நெரும்பூரை சேர்ந்தவர் ஞானபிரகாசம். சலவை தொழிலாளி.

Update: 2017-05-18 21:47 GMT
திருக்கழுக்குன்றம்,

காஞ்சீபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டத்திற்குட்பட்ட நெரும்பூரை சேர்ந்தவர் ஞானபிரகாசம். சலவை தொழிலாளி. இவரது மகன்கள் வேளாங்கன்னி, ராயப்பன், சகாயம். இவர்கள் கடந்த 35 ஆண்டுகளாக இங்குள்ள கிராம நத்த புலத்தில் வீடுகட்டி வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இதே பகுதியில் வசித்துவரும் தனிநபர் ஒருவரின் பெயரில் மேற்படி நிலத்திற்கு பட்டா வழங்கியுள்ளதாக தெரிகிறது. இதனை அறிந்த அந்த பகுதி மக்கள் சலவை தொழிலாளர்களுக்கு ஆதரவாக மேற்படி இடத்திற்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்யக்கோரி நெரும்பூர் விட்டிலாபுரம் கூட்டு சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த திருக்கழுக்குன்றம் தாசில்தார் மனோகரன் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பிரச்சினைக்குரிய இடத்தை நேரில் பார்வையிட்டு உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்