குஜிலியம்பாறை பகுதியில் வறட்சியால் கருகிய தென்னை மரங்கள்
குஜிலியம்பாறை பகுதியில் வறட்சியால் தென்னை மரங்கள் கருகியுள்ளன.
குஜிலியம்பாறை,
திண்டுக்கல் மாவட்டத்தில் வறட்சியால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குஜிலியம்பாறையும் ஒன்றாக உள்ளது. வறட்சியின் காரணமாக குஜிலியம்பாறை பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது. இதனால் விவசாயம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு போதுமான அளவு தண்ணீர் கிடைப்பதில்லை. மேலும் ஆடு, மாடுகளும் தண்ணீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டு வருகின்றன.
மேலும் அவற்றுக்கான தீவனத்தின் விலையும் அதிகரித்துள்ளதால் தங்களிடம் உள்ள ஆடு, மாடுகளை விவசாயிகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது ஒருபுறம் இருக்க, ஆழ்துளை கிணறுகள் மூலம் கிடைக்கும் தண்ணீரை கொண்டு தென்னை மரங்களை விவசாயிகள் பராமரித்து வந்தனர்.
கருகும் தென்னை மரங்கள்
ஆனால் தற்போது அந்த கிணறுகளிலும் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. இதையடுத்து அப்பகுதிகளில் உள்ள தென்னை மரங்கள் தண்ணீர் இன்றி கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், குஜிலியம்பாறை பகுதிகளில் நிலவும் வறட்சியால் 80 சதவீத தென்னை மரங்கள் தண்ணீர் இன்றி கருகியுள்ளன.
குறிப்பாக குஜிலியம்பாறை, கொண்டமநாயக்கன்பட்டி, எல்.புதூர், சேர்வைகாரன்பட்டி, தி.கூடலூர், ராமகிரி, ஆர். கோம்பை, ஆலம்பாடி, ஆர்.வெள்ளோடு, ஆர்.புதுக்கோட்டை, கரிக்காலி, தோளிபட்டி, சின்னுலுப்பை, மல்லப்புரம், லந்தக்கோட்டை ஆகிய இடங்களில் அதிக அளவில் தென்னை மரங்கள் கருகியுள்ளன.
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
நிவாரணம் வழங்கவில்லை
அதன்படி குஜிலியம்பாறை பகுதியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட இடங்களை அதிகாரிகள் பார்வையிட்டு கணக்கெடுப்பு நடத்தினர். ஆனால் இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை.இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இனிவரும் காலங் களிலாவது விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.