கெம்பகரை காப்புக்காட்டில் யானைகள் கணக்கெடுப்பு பணி

கெம்பகரை காப்புக்காட்டில் யானைகள் கணக்கெடுப்பு பணி

Update: 2017-05-18 22:45 GMT
தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதிகளில் உள்ள யானைகளை கணக்கெடுக்கும் பணி மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரன் மேற்பார்வையில், ஓசூர் உதவி வன பாதுகாவலர் பிரியதர்சினி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. அதன்படி கெம்பகரை காப்புக்காட்டில் தேன்கனிக்கோட்டை வனச்சரகர் ஆறுமுகம் தலைமையில் வனத்துறையினர், வேட்டை தடுப்பு குழுவினர் ஆகியோர் யானைகள் கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டனர். இந்த பணியின் போது யானையின் சாணம் மற்றும் கால் தடம் ஆகியவற்றை கொண்டு யானைகளின் எண்ணிக்கைகள் கணக்கிடப்படுகிறது.

இந்த நிலையில் கெம்பகரை காப்புக்காட்டில் நேற்று வனத்துறையினர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட போது திடீரென அங்கு யானைகள் கூட்டம் வந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் மறைவான இடத்தில் நின்றுகொண்டு யானைகளை கணக்கிட்டனர். மேலும் அவர்கள் தங்களது கேமராவில் யானைகளை படம் பிடித்தனர். சிறிது நேரம் அந்த பகுதியில் சுற்றித் திரிந்த யானைகள் பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டன.

மேலும் செய்திகள்