மாவட்டம் முழுவதும் உர விற்பனையில் முறைகேடுகளை தடுக்க ‘பாய்ன்ட் ஆப் சேல்’ கருவி
வேலூர் மாவட்டத்தில் உரவிற்பனையில் முறைகேடுகளை தடுக்க ‘பாய்ன்ட்ஆப் சேல்’ கருவி வழங்கப்படுகிறது.
வேலூர்,
வேலூர் மாவட்டத்தில் உரவிற்பனையில் முறைகேடுகளை தடுக்க ‘பாய்ன்ட்ஆப் சேல்’ கருவி வழங்கப்படுகிறது. இதில் விவசாயிகள் தங்கள் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
‘பாய்ன்ட்ஆப் சேல்’ கருவி
விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரவிற்பனையில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்கள், உர விற்பனையாளர்களுக்கு ‘பாய்ன்ட்ஆப் சேல்’ கருவிகள் வழங்கப்படுகிறது. இது வரை 16 மாநிலங்களில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு விட்டது. 17-வது மாநிலமாக தமிழ்நாட்டில் இந்த திட்டம் அடுத்த மாதம் (ஜூன்) முதல் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்காக மாநிலத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள், மொத்த விற்பனையாளர்கள், சில்லரை விற்பனையாளர்களுக்கு ‘பாய்ன்ட்ஆப் சேல்’ கருவி வழங்கப்பட உள்ளது. வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 181 கூட்டுறவு சங்கங்கள், 250 மொத்த விற்பனையாளர்கள், 51 சில்லரை விற்பனையாளர்களுக்கு ‘பாய்ன்ட் ஆப் சேல்’ கருவி இலவசமாக வழங்கப்பட இருக்கிறது. இதன் மதிப்பு ரூ.18 ஆயிரம் ஆகும்.
இதற்காக கூட்டுறவு சங்க ஊழியர்கள், உரவிற்பனையாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று உர விற்பனையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
வேளாண்மை இணை இயக்குனர் வாசுதேவ ரெட்டி தலைமையில் நடந்த இந்த பயிற்சி முகாமில் உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) நெப்போலியன், உதவி வேளாண்மை அலுவலர் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டு ‘பாய்ன்ட் ஆப் சேல்’ கருவியை பயன்படுத்துவது குறித்து விளக்கினர்.
இது குறித்து உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) நெப்போலியன் கூறியதாவது:-
முறைகேடுகளை தடுக்க
உரவிற்பனையில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கும் வகையில் ‘பாய்ன்ட்ஆப் சேல்’ கருவி வழங்கப்படுகிறது. உரம் இருப்பு, விற்பனை அனைத்தும் இந்த கருவியில் பதிவாகும். இதனால் இருப்பு, விற்பனையில் முறைகேடுகள் செய்ய முடியாது. மேலும் விவசாயிகள் தங்கள் ஆதார் எண்ணை இந்த கருவியில் பதிவு செய்ய வேண்டும்.
உரம் வாங்கும்போது உரம்வாங்கும் விவசாயி மற்றும் விற்பனையாளர் ‘பாய்ன்ட்ஆப் சேல்’ கருவியில் தங்கள் கைவிரல் ரேகையை பதியவேண்டும். மேலும் எவ்வளவு உரம் விற்பனை செய்யப்படுகிறதோ அதற்கு மட்டுமே மானியம் வழங்கப்படும். வருகிற 30-ந் தேதி வரை மட்டுமே கையால் எழுதப்பட்ட ரசீது வழங்கப்படும். அடுத்த மாதம் 1-ந் தேதியில் இருந்து பாய்ன்ட்ஆப் சேல் கருவிமூலம் ரசீது வழங்கப்படும்.
கல்வித்தகுதி
அதேபோன்று நவம்பர் மாதத்திற்கு பிறகு உரவிற்பனைக்கு உரிமம் பெற கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட உள்ளது. அதன்படி ஏற்கனவே இருக்கும் உரிமத்தை புதுப்பிக்கவும், புதிதாக உரிமம் பெறுவதற்கும் அவர்கள் பி.எஸ்சி வேதியியல், வேளாண்மை மற்றும் டிப்ளமோ, பட்டய மேற்படிப்பு ஆகியவை படித்திருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.