கர்நாடக சட்டசபை 5-ந் தேதி கூடுகிறது
கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் (ஜூன்) 5-ந்தேதி தொடங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடக மந்திரி சபை கூட்டம் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது.
மந்திரிசபை கூட்டம்
இதில் தலைமை செயலாளர் சுபாஷ்சந்திர குந்தியா மற்றும் மந்திரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டத்துறை மந்திரி ஜெயச்சந்திரா நிருபர்களிடம் கூறியதாவது:-
கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் அடுத்த மாதம்(ஜூன்) 5-ந் தேதி பெங்களூரு விதானசவுதாவில் தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் 16-ந் தேதி வரை நடத்துவது என்று மந்திரி சபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தொடரை நீட்டிப்பது குறித்து சட்டசபையின் அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப் படும்.
வீட்டு மனைகளை முறைப்படுத்துவது...
கர்நாடகத்தில் அரசு நிலத்தில் 30-க்கு 40 என்ற அளவில் உள்ள வீட்டு மனைகளை முறைப்படுத்துவது என்று ஏற்கனவே முடிவு எடுக்கப்பட்டது. அதில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மாநகராட்சிகளின் மையப்பகுதிகளில் இருந்து 18 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள வீட்டு மனைகள், நகரசபைகளில் இருந்து 10 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள வீட்டு மனைகள், புரசபைகளில் இருந்து 5 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள வீட்டு மனைகள், பட்டண பஞ்சாயத்துகளில் இருந்து 3 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள வீட்டு மனைகள் முறைப்படுத்தப்படும். இந்த வீட்டு மனைக்கு ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு கட்டணமாக ரூ.5 ஆயிரமும், இதர பொது பிரிவினருக்கு ரூ.10 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
4 லட்சம் வீடுகள்
வீட்டு வசதித்துறையில் நடப்பாண்டில் 4 லட்சம் வீடுகள் கட்டப்படுகின்றன. அடுத்த 3 ஆண்டுகளில் 10 லட்சம் வீடுகள் கட்டப்படும். இந்த துறையில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் பணிகள் நடப்பது தாமதமாகிறது. இதை சரிசெய்ய வெளி ஒப்பந்தம் அடிப்படையில் ஊழியர்களை நியமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சிவமொக்காவில் விவசாய பல்கலைக்கழக கிளை அமைக்கப்படுகிறது.
இதற்காக ரூ.138 கோடிக்கு டெண்டர் விடும் பணிக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஹாவேரி மாவட்டத்தில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கியது, சிக்கோடியில் வட்டார கல்வி அதிகாரி ஒருவர் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியது ஆகிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக லோக் அயுக்தா கடிதம் எழுதியுள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரையும் பணி நீக்கம் செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது.
ரூ.35 கோடி நிதிச்சுமை
தேசிய உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறைகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆண்டுக்கு ரூ.1.20 லட்சம் வருமானம் உள்ளவர்கள் இந்த சட்டத்தின் மூலம் பயன் அடைய முடியும். அனாதை இல்லங்கள், பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு மையங்கள் என ஆதரவற்றோருக்காக நடத்தப்படும் இல்லங்களுக்கு இலவசமாக அரிசி வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.35 கோடி நிதிச்சுமை ஏற்படும்.
பெங்களூரு மாகடி ரோட்டில் ரூ.22.85 லட்சத்தில் சுகாதார பவன் அமைக்கப்படுகிறது. அனைத்து துறைகளும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரப்படுவது இதன் நோக்கம் ஆகும். இதில் சில திருத்தங்களை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூர் தாலுகாவில் ராஜபுசி, பன்ட்ரா உள்ளிட்ட சில சமூகங்களை சேர்ந்த சுமார் 8 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். அவர்கள் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர்கள். நீண்ட காலத்திற்கு முன்பு அங்கு வந்து குடியேறினார்கள்.
அணைக்கட்டுகளில் பராமரிப்பு பணிகள்
அந்த மக்களை ஆதிதிராவிடர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதையடுத்து அந்த மக்களை ஆதிதிராவிடர் பட்டியலில் சேர்க்குமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வது என்று தீர்மானித்து உள்ளோம். உலக வங்கியின் கடனுதவியுடன் ரூ.581 கோடி செலவில் கே.ஆர்.எஸ்., கபினி, ஹாரங்கி, ஹேமாவதி உள்பட 22 அணைக்கட்டுகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பீதர் மாவட்டத்தில் புதிதாக ஒரு என்ஜினீயரிங் கல்லூரி தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொப்பல் மாவட்டம் கங்காவதியில் துங்கபத்ரா அணைக்கு குறுக்கே ரூ.40 கோடியில் ஒரு பாலம் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டது. திறமை மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலி இடங்களை நிரப்பவும், இதற்கான நியமன விதிமுறைகளில் செய்யப்பட்டுள்ள திருத்தத்திற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது. ரேஷன் கடைகளில் முறைகேடுகளை தடுக்க கண்காணிப்பு குழுக்கள் அமைக்கவும், அதில் இடம் பெறும் உறுப்பினர்களுக்கு படியாக தலா ரூ.150 வழங்கவும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு ஜெயச்சந்திரா கூறினார்.