பிளஸ்-2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வினியோகம் தொடங்கியது
கரூரில் பிளஸ்-2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வினியோகம் நேற்று தொடங்கியது.
கரூர்,
தமிழகத்தில் கடந்த 12-ந்தேதி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த ஆண்டு ‘ரேங்க்’ பட்டியல் முறை கைவிடப்பட்டன. மாநில, மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளின் பெயர்களும், மதிப்பெண்களும் வெளியிடப்படவில்லை. கரூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 104 பள்ளிகளில் 5 ஆயிரத்து 458 மாணவர்களும், 5 ஆயிரத்து 946 மாணவிகளும் என மொத்தம் 11 ஆயிரத்து 404 பேர் எழுதியிருந்தனர். இதில் 5 ஆயிரத்து 112 மாணவர்களும், 5 ஆயிரத்து 717 மாணவிகளும் என மொத்தம் 10 ஆயிரத்து 829 பேர் தேர்ச்சி பெற்றனர். கரூர் மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் 94.95 ஆகும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 1.43 சதவீதம் தேர்ச்சி அதிகம் பெற்றிருந்தது.
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்
இந்த நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதியவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படும் என பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
மேலும் இணையதளம் வாயிலாகவும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என கூறியிருந்தனர். அதன்படி பிளஸ்-2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வினியோகம் நேற்று தொடங்கியது. கரூரில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றனர்.
தற்காலிக மதிப்பெண் சான்றிதழை உயர்கல்வி படிக்க விண்ணப்பிப்பதற்காக மாணவ-மாணவிகள் பயன்படுத்திக்கொள்ளலாம். 90 நாட்களுக்கு மட்டுமே இந்த சான்றிதழ் செல்லுபடியாகும். அதற்குள் நிரந்தர மதிப்பெண் சான்றிதழ் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும். இதற்கான பணிகள் நடந்து வருவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய முறை
தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் இந்த ஆண்டு புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மாணவ-மாணவிகளின் பெயர் வழக்கமாக ஆங்கில எழுத்துக்களில் மட்டுமே இடம்பெற்றிருக்கும். ஆனால் இந்த ஆண்டு தமிழ் மொழியிலும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் பாடங்கள், பாடவாரியாக மதிப்பெண்கள் விவரம் ஆகியவை ஆங்கில மொழியின் அருகே மொழி பெயர்க்கப்பட்டு தமிழ் மொழியிலும் எழுதப்பட்டிருந்தன.
இதே முறை நிரந்தர மதிப்பெண் சான்றிதழிலும் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சில மாணவ-மாணவிகளின் பெயர்களை ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டு தமிழ் மொழியில் எழுதப்பட்டிருந்ததில் சில பிழைகள் இருந்தன.
இதனை மாணவ-மாணவிகள் குற்றச்சாட்டாக கூறினர். நிரந்தர மதிப்பெண் சான்றிதழில் இதே பிழை வந்தால் தங்களுக்கு எதிர்காலத்தில் பிரச்சினை ஏற்படும் எனவும், பிழைகள் இல்லாமல் மதிப்பெண் சான்றிதழ் வழங்க வேண்டும் எனவும் மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்தனர்.