ஆவடி ரெயில் நிலையம் அருகே சிக்னல் கோளாறு; மின்சார ரெயில்கள் தாமதம்

ஆவடி–அண்ணனூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள சிக்னலில் நேற்று காலை திடீரென கோளாறு ஏற்பட்டது.

Update: 2017-05-17 21:45 GMT

ஆவடி,

ஆவடி–அண்ணனூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள சிக்னலில் நேற்று காலை 8 மணி அளவில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதனால் சென்னை நோக்கி வந்த அனைத்து மின்சார ரெயில்களும் வரும் வழியிலேயே ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

இதனால் காலையில் வேலைக்கு சென்ற பயணிகள் குறித்த நேரத்துக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். சிக்னல் கோளாறு குறித்து ஆவடி ரெயில் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ரெயில்வே ஊழியர்கள், சுமார் 9 மணி அளவில் சிக்னல் கோளாறை சரிசெய்தனர். இதனால் மின்சார ரெயில்கள் அனைத்தும் தாமதமாக ஒன்றன் பின் ஒன்றாக சென்னை நோக்கி புறப்பட்டு சென்றன.

மேலும் செய்திகள்