தேனியில், 21-ந்தேதி நடைபெறும் போலீஸ் தேர்வை 17 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்
தேனியில் வருகிற 21-ந்தேதி நடைபெறும் போலீஸ் தேர்வை 17 ஆயிரத்து 72 பேர் எழுதுகின்றனர். இதற்காக 11 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
தேனி,
போலீஸ் துறைக்கு இரண்டாம் நிலை காவலர்களை தேர்வு செய்வதற்கான எழுத்துத்தேர்வு வருகிற 21-ந்தேதி நடைபெற உள்ளது. தேனி மாவட்டத்தில் இந்த தேர்வை 3 ஆயிரத்து 452 பெண்கள் உள்பட மொத்தம் 17 ஆயிரத்து 72 பேர் எழுத உள்ளனர்.
இந்த தேர்வுக்காக தேனியில், மொத்தம் 11 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தேர்வு மையங் கள் கம்மவார் கல்லூரி, நாடார் சரஸ்வதி என்ஜினீயரிங் கல்லூரி, மேரிமாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பி.சி.பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய 6 இடங் களில் அமைந்து உள்ளன. இதில் 2 தேர்வு மையங்கள் பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தேர்வு மையங்களில் தேவையான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பாதுகாப்பு ஏற்பாடு
இந்த தேர்வு பாதுகாப்பு பணியில் 1,300 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஒவ்வொரு தேர்வு மையத்திலும் 20 தேர்வர்களுக்கு ஒரு போலீஸ்காரர் வீதம் கண்காணிப்பு அலுவலராக நியமிக் கப்பட்டு உள்ளனர். மேலும், 100 தேர்வர்களுக்கு ஒரு சப்-இன்ஸ்பெக்டர்கள் வீதம் தேர்வு அறை பொறுப்பு அலுவலராக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அதேபோல், 400 தேர்வர்களுக்கு ஒரு இன்ஸ்பெக்டர் வீதம் குழு பொறுப்பு அலுவலராக நியமிக்கப்பட்டு உள்ளனர். ஒவ்வொரு தேர்வு மையத்திலும் ஒரு போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
கட்டுப்பாடுகள்
இந்த தேர்வு அறைக்கு காலை 9 மணிக்குள் தேர்வர்கள் வந்து விட வேண்டும். தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி, 11.20 மணி வரை நடைபெற உள்ளது. 80 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்.
தேர்வு எழுத வருபவர்கள் பால்பாயிண்ட் பேனா, தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு, தேர்வு எழுதும் அட்டை, தண்ணீர் பாட்டில் ஆகியவை கொண்டு வரலாம். செல்போன், கால்குலேட்டர், புளுடூத், பேக், புத்தகம் போன்றவை கொண்டு வர அனுமதி கிடையாது.
இந்த தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமை தாங்கி, தேர்வுக்காக மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், தேர்வு அறைகளில் செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக பல்வேறு அறிவுரைகள் வழங்கினார். கூட்டத்தில், போலீஸ் துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.