தூத்துக்குடியில் வீட்டுக்கு டி.வி. பார்க்க வந்த மகளின் தோழியை மிரட்டி கற்பழித்த தொழிலாளி போலீசார் வலைவீச்சு

தூத்துக்குடியில், வீட்டுக்கு டி.வி. பார்க்க வந்த மகளின் தோழியான மாணவியை மிரட்டி கற்பழித்த சுமைதூக்கும் தொழிலாளியையும், இதற்கு உடந்தையாக இருந்த அவருடைய மனைவியையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2017-05-17 20:00 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடியில், வீட்டுக்கு டி.வி. பார்க்க வந்த மகளின் தோழியான மாணவியை மிரட்டி கற்பழித்த சுமைதூக்கும் தொழிலாளியையும், இதற்கு உடந்தையாக இருந்த அவருடைய மனைவியையும் போலீசார் தேடி வருகின்றனர்.

மகளின் தோழி

தூத்துக்குடியை சேர்ந்த சக்திவேல் மகன் தவசிபெருமாள்(வயது 45). சுமை தூக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி சித்ரா. இவர் வீட்டு வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். இவர்களுடைய வீட்டுக்கு அருகில் கணவரை இழந்த பெண் வசித்து வருகிறார். இவருக்கு 13 வயதுடைய பெண் உள்பட 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இதில், 13 வயதுடைய பெண், பள்ளிக்கூடம் ஒன்றில் 8–ம் வகுப்பு படித்து வருகிறாள். இவளும், தவசிபெருமாளின் 15 வயது மகளும் நெருங்கிய தோழிகள். இதனால், பள்ளிக்கூடம் செல்லாத நேரங்களில் தனது தோழியை தேடி அந்த மாணவி தவசிபெருமாள் வீட்டுக்குசெல்வாள். இருவரும் ஒன்றாக அமர்ந்து வீட்டில் டி.வி. பார்ப்பது வழக்கம்.

டி.வி.பார்க்க சென்றாள்

சம்பவத்தன்று வழக்கம்போல் அந்த மாணவி தவசிபெருமாள் வீட்டிற்கு சென்றுள்ளாள். அங்கு தோழிகள் இருவரும் டி.வி. பார்த்துக் கொண்டு இருந்துள்ளனர். தவசிபெருமாளின் மகன்கள் இருவரும் வெளியில் விளையாட சென்று விட்டனர். சித்ரா வீட்டு வேலைகள் செய்வதற்காக வெளியில் சென்று விட்டார்.

சிறிது நேரத்தில் தவசி பெருமாள் மகளும், வீட்டுக்கு வெளியே பாத்திரங்களை கழுவ சென்றுள்ளாள். வீட்டிற்குள் அந்த மாணவியும், தவசிபெருமாளும் மட்டும் இருந்துள்ளனர்.

மாணவியை மிரட்டி கற்பழிப்பு

அப்போது திடீரென வீட்டின் கதவை உள்புறமாக பூட்டிய தவசிபெருமாள், டி.வி. பார்த்து கொண்டிருந்த அந்த மாணவியை கட்டிப்பிடித்து கற்பழிக்க முயன்றுள்ளார். தனது மகளைப்போன்று தன்னையும் ஒரு மகளாக நினைக்க வேண்டிய தோழியின் தந்தையின்கேடுகெட்ட நடத்தையை அறிந்து அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி சத்தம் போட்டுள்ளாள். அந்த சத்தம் வெளியில் கேட்காதவாறு மாணவியின் வாயில் துணியை திணித்ததுடன், கைகளை பின்புறமாக கயிற்றால் கட்டிய தவசிபெருமாள் அந்த மாணவியை மிரட்டி கற்பழித்துள்ளார்.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சியில் உறைந்து போன அந்த மாணவியின் கைகளை தவசிபெருமாள் அவிழ்த்து விட்டதுடன், வாயில் இருந்த துணியையும் எடுத்து விட்டு உள்ளார். இந்த சம்பவத்தை வெளியே சொல்லக்கூடாது என தவசி பெருமாள் அந்த மாணவியை மிரட்டி உள்ளார்.

மனைவியும் உடந்தை

அந்த நேரத்தில் தவசிபெருமாளின் மனைவி சித்ரா வீட்டுக்கு வந்துள்ளார். அவரை பார்த்தவுடன் மாணவி கதறி அழுது நடந்த சம்பவத்தை அவரிடம் தெரிவித்துள்ளாள். அதைக்கேட்ட சித்ரா, தனது கணவரை கண்டிக்காமல் கணவருக்கு ஆதரவாக இங்கு நடந்த சம்பவத்தை வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்று அந்த மாணவியை மிரட்டி வெளியே அனுப்பி விட்டுள்ளார்.

மிரட்சியுடன் வீட்டுக்கு சென்ற அந்த மாணவியை அவரது தாயார் விசாரித்துள்ளார். அப்போது அந்த மாணவி தனக்கு உடம்பு சரியில்லை என தாயாரிடம் கூறி மழுப்பி விட்டாராம். மறுநாளும் மாணவி மிரட்சியுடன் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த, அவருடைய தாயார் வற்புறுத்தி விசாரித்துள்ளார். அப்போதுதான் தன்னை தவசிபெருமாள் கற்பழித்ததை அந்த மாணவி கதறி அழுதவாறு கூறியுள்ளாள். அதை கேட்டு மாணவியின் தாயார் பதறிப்போனார்.

கணவன்–மனைவிக்கு வலைவீச்சு


இது குறித்து மாணவியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில், தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தவசிபெருமாள், சித்ரா ஆகிய இருவரையும் விசாரணை நடத்துவதற்காக அவர்கள் வீட்டுக்கு தேடி வந்தனர். போலீசார் தங்களை தேடி வருவதை அறிந்ததும் கணவன்–மனைவி இருவரும் குடும்பத்தினருடன் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடிவருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவியை தூத்துக்குடியில் உள்ள முத்துக்குவியல் இல்லத்தில் போலீசார் பாதுகாப்பாக தங்க வைத்துள்ளனர்.

தனது வீட்டுக்கு டி.வி. பார்க்க வந்த மகளின் தோழியை, தொழிலாளி கற்பழித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்