திசையன்விளையில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

திசையன்விளையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2017-05-17 20:45 GMT
திசையன்விளை,

திசையன்விளையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் நேற்று பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பெருந்தலைவர் காமராஜர் நற்பணி இயக்கம் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அதன் தலைவர் ராஜன் தலைமை தாங்கினார். ராதாபுரம் யூனியன் முன்னாள் தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், திசையன்விளை நகர பஞ்சாயத்து முன்னாள் தலைவர் புஷ்பலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார காங்கிரஸ் பொது செயலாளர் மருதூர் மணிமாறன் வரவேற்றார்.

கோ‌ஷம் எழுப்பினர்

ஆர்ப்பாட்டத்தின் போது, தாமிரபரணி கூட்டுக் குடிநீர் பல மாதங்களாக வழங்கப்படாததை கண்டித்தும், குடிநீர் சீராக வழங்கக் கோரியும் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில், அரிமா சங்க முன்னாள் கவர்னர் சுயம்புராஜன், மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் விஜயபெருமாள், ராதாபுரம் தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் விவேக் முருகன், நகர தி.மு.க. முன்னாள் செயலாளர் அன்பழகன், திசையன்விளை நகர காங்கிரஸ் தலைவர் பிலிப்போஸ், நகர பஞ்சாயத்து முன்னாள் கவுன்சிலர்கள் சரசுவதி, ஆல்பர்ட், வட்டார காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ், தே.மு.தி.க. நகர செயலாளர் நடேஷ் அரவிந்த் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்