பாளையங்கோட்டையில் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நாளை தொடங்குகிறது
நெல்லை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) பாலா தெரிவித்துள்ளார்.
நெல்லை,

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
கலந்தாய்வு
நெல்லை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் பாளையங்கோட்டை சாராள் தக்கர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வருகிற 19–ந் தேதி (நாளை) முதல் 31–ந் தேதி வரை வரை இந்த ஆண்டுக்கான தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.
19–ந் தேதி அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டத்திற்குள் மாறுதல் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்)
20–ந் தேதி அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு, 22–ந் தேதி அரசு, நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டத்திற்குள் மாறுதல் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்)
24–ந் தேதி அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுகலை, தொழிற்கல்வி ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டத்திற்குள் மாறுதல்). 25–ந் தேதி அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுகலை, தொழிற்கல்வி ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்).
முதுகலை ஆசிரியர்கள்
27–ந் தேதி அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்கள் பதவி உயர்வு, 28–ந் தேதி உடற்கல்வி ஆசிரியர்கள், கலை ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் (மாவட்டத்திற்குள் மாறுதல்)
மாலையில் உடற்கல்வி ஆசிரியர்கள், கலை ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் (மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்).
29–ந் தேதி பட்டதாரி ஆசிரியர்கள் (மாவட்டத்திற்குள்), 30–ந் தேதி பட்டதாரி ஆசிரியர்கள் (மாவட்டம் விட்டு மாவட்டம்), 31–ந் தேதி இடைநிலை, உடற்கல்வி, சிறப்பு ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.