பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக விழாவுக்கு கால்நாட்டுதல் நிகழ்ச்சி இன்று நடக்கிறது
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவுக்கான கால்நாட்டுதல் நிகழ்ச்சி இன்று (புதன்கிழமை) நடக்கிறது.
கன்னியாகுமரி,
பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் விசாக திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக திருவிழா வருகிற 29–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழா அடுத்த மாதம் (ஜூன்) 7–ந் தேதி வரை நடக்கிறது. திருவிழாவையொட்டி தினமும் காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் நடக்கிறது.
9–ம் நாள் திருவிழாவான அடுத்த மாதம் 6–ந் தேதி காலையில் தேரோட்டம் நடக்கிறது. 10–ம் நாள் திருவிழா அன்று அம்மனுக்கு கடலில் ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. ஆண்டில் 5 முக்கிய நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்குவாசல் அன்றைய தினம் திறக்கப்பட்டு, அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவில் தெப்பத்திருவிழாவும் நடக்கிறது.
கால்நாட்டு விழா
இந்த வைகாசி விசாக திருவிழாவுக்கான கால்நாட்டுதல் நிகழ்ச்சி இன்று (புதன்கிழமை) காலை 9.15 மணிக்கு நடக்கிறது. நிகழ்ச்சியில், பகவதிஅம்மன் கோவில் மேல்சாந்திகள் மணிகண்டன், ராதாகிருஷ்ணன், விட்டல், பத்மநாபன், கீழ்சாந்திகள் சீனிவாசன், ராமகிருஷ்ணன் ஆகியோர் பூஜைகள் செய்து மேளதாளத்துடன் கால் நாட்டுகின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் பாரதி, நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர் சிவகுமார், கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கோவில் தலைமை கணக்காளர் ஸ்ரீராமச்சந்திரன் மற்றும் குழுவினர் செய்துள்ளனர்.