‘டெண்டர் சூர்’ திட்டத்தின் கீழ் ரூ.700 கோடியில் 50 சாலைகளை மேம்படுத்த திட்டம்
‘டெண்டர் சூர்‘ திட்டத்தின் கீழ் ரூ.700 கோடியில் 50 சாலைகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சித்தராமையா கூறினார்.
பெங்களூரு,
பெங்களூருவில் ரூ.115.33 கோடி செலவில் டெண்டர் சூர்‘ திட்டத்தின் கீழ் 9.19 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரெசிடென்சி ரோடு, ரிச்மண்டு ரோடு, நிருபதுங்கா ரோடு, மியூசியம் ரோடுகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. இந்த சாலைகள் திறப்பு விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. அந்தந்த சாலைகளுக்கு நேரில் சென்று முதல்-மந்திரி சித்தராமையா, மேம்படுத்தப்பட்ட சாலைகளை திறந்து வைத்து பேசும்போது கூறியதாவது:-
‘டெண்டர் சூர்‘ திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு உள்ள சாலைகளை தோண்ட தேவை இல்லாத வகையில் நிறுவப்பட்டுள்ளது. பாதசாரிகளுக்கு ஏற்ற வகையில் சிறப்பான முறையில் நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. பெங்களூருவில் இந்த திட்டத்தின் கீழ் ரூ.700 கோடி செலவில் மேலும் 50 சாலைகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். 4 கட்டங்களாக இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. குறித்த காலத்தில் இந்த பணிகளை முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.
தாமதம் ஏற்படக்கூடாது
படிப்படியாக பெங்களூருவில் உள்ள சாலைகள் மேம்படுத்தப்படும். அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்படும் பணிகளை விரைவாக செய்து முடிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் பணியில் தாமதம் ஏற்படக்கூடாது. பெங்களூரு நகரின் அடிப்படை வசதிகளுக்காக ரூ.7,300 கோடி செலவு செய்யப்படுகிறது. தலைநகர் பெங்களூருவுக்கு புதுவடிவம் கொடுக்கப்படுகிறது. சாலைகளை மேம்படுத்துதல், நீண்ட காலத்திற்கு சேதமாகாத வண்ணம் தரமான சாலைகள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பெங்களூருவில் மக்கள்தொகை கடந்த 20 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவுக்கு அதிகரித்து உள்ளது. ஏழை மக்களின் வசதிக்காக ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி முதல் 198 வார்டுகளிலும் மலிவு விலை இந்திரா உணவகம் திறக்கப்படுகிறது. பெங்களூருவில் ஒரு நாளைக்கு 4,000 டன் குப்பை சேருகிறது. இந்த குப்பையை சரியான முறையில் நிர்வகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிரிகேடு ரோடு, ரெசிடென்சி ரோடு சந்திப்பில் போர் நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. அதை நான் திறந்து வைத்துள்ளேன்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
கோபமாக கேள்வி
இந்த விழாவில் மந்திரிகள் ராமலிங்கரெட்டி, கே.ஜே.ஜார்ஜ், கிருஷ்ணப்பா, ரோஷன் பெய்க், மேயர் பத்மாவதி உள்பட பலர் கலந்து கொண்டனர். மேம்படுத்தப்பட்ட சாலைகளில் சித்தராமையா நடந்து சென்று ஆய்வு செய்தார். மொத்தத்தில் 9.19 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
மைசூரு ரோட்டில் கால்வாய் பணி கடந்த 2 ஆண்டு காலமாக மந்த கதியில் நடைபெற்று வருவது பற்றி முதல்-மந்திரியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது சித்தராமையா, மாநகராட்சி கமிஷனரை பார்த்து, 2 ஆண்டுகளாக கால்வாய் பணியை முடிக்காமல் இருப்பது ஏன்? என்று கோபமாக கேள்வி கேட்டார். மேலும் அந்த பணிகளை விரைவாக செய்து முடிக்கும்படி அவர் உத்தரவிட்டார்.
மூடநம்பிக்கை தடை சட்டம்
முன்னதாக கிருஷ்ணா இல்லத்தில் முதல்-மந்திரி சித்தராமையாவை மடாதிபதிகள் சிலர் நேரில் சந்தித்து, மூடநம்பிக்கை தடை சட்டத்தை இயற்ற வேண்டும் என்று கோரி மனு கொடுத்தனர். இது பற்றி கருத்து தெரிவித்த சித்தராமையா, “இது தொடர்பாக மந்திரிசபை துணை குழுவை அமைத்துள்ளேன். அந்த குழு அறிக்கை வழங்கிய பிறகு ஆய்வு செய்து முடிவு எடுக்கப்படும்“ என்றார்.