விழிப்புணர்வு பேரணி

தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு கூடுவாஞ்சேரியில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு பேரணி

Update: 2017-05-16 21:15 GMT
வண்டலூர்,

தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு கூடுவாஞ்சேரியில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு பேரணியை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி கூடுவாஞ்சேரி மின்வாரியம் அருகே தொடங்கி கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் முடிவடைந்தது. இதில் கல்லூரி மாணவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டு டெங்கு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.

இதில் பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேஷ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சபாபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். பேரணி முடிவில் கலெக்டர் பொன்னையா தலைமையில் டெங்குவை ஒழிப்போம் என்று அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர். 

மேலும் செய்திகள்