பாப்பிரெட்டிப்பட்டியில் பரபரப்பு: டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்
பாப்பிரெட்டிப்பட்டியில் டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொம்மிடி
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பஸ் நிலையம் அருகில் ஒரே கட்டிடத்தில் 2 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இந்த கடைகள் வழியாக காமராஜ் நகர், செங்கன்பட்டி, அண்ணா நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர். பார் வசதி இல்லாததால் குடிமகன்கள் சாலையோரத்தில் அமர்ந்தும், இருசக்கர வாகனங்களில் வைத்தும் மது குடித்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.
இதனால் இந்த டாஸ்மாக் கடைகளை மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று கடை முன்பு திரண்டனர். அப்போது டாஸ்மாக் கடை ஊழியர்கள் கடைகளை திறக்க வந்தனர். அதற்கு பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேல், சப்-இன்ஸ்பெக்டர் தங்கம், வருவாய் ஆய்வாளர் பழனி, கிராம நிர்வாக அலுவலர் ராஜா ஆகியோர் விரைந்து வந்து பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோர்ட்டு உத்தரவின் பேரில் கோம்பை, ஏ.பள்ளிப்பட்டி, புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் நெடுஞ்சாலையோரம் இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் குடிமகன்கள் பஸ் நிலையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு வருகின்றனர். பார் வசதி இல்லாததால் அவர்கள் சாலையோரம் அமர்ந்து மது குடிக்கின்றனர். மேலும் கூட்டம் அதிகமாக வந்து செல்வதால் அந்த வழியாக செல்லும் பெண்களுக்கு இடையூறாக உள்ளது. இதனால் இந்த டாஸ்மாக் கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களது ஆலோசனையின் பேரில் ஊழியர்கள் கடைகளை திறக்காமல் திரும்பி சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.