திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம், திருச்சிக்கு குறைந்தளவு அரசு பஸ்கள் இயக்கம் பயணிகள் அவதி
திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம், திருச்சிக்கு குறைந்தளவு அரசு பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.
திருவண்ணாமலை
போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலை பஸ்நிலையத்தில் இருந்து கடந்த 14–ந் தேதி மாலை 6 மணி முதல் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை.
நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் 9 மணி வரை ஒருசில அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. அதிகளவு தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. பயணிகள் தனியார் பஸ்களில் பயணம் செய்தனர். 9 மணி முதல் குறிப்பிட்ட இடைவெளியில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்தனர்.
விழுப்புரம், திருச்சிக்கு...
நேற்று காலை குறிப்பிட்ட இடைவெளியில் திருவண்ணாமலையில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. அண்ணா தொழிற்சங்க தொழிலாளர் விடுமுறை எடுக்காமல் பணிக்கு வந்து பஸ்சை இயக்கினார்கள். தனியார் மற்றும் பள்ளி பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களும் அரசு பஸ்சை இயக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சென்னை, வேலூர் பகுதிகளுக்கு திருவண்ணாமலையில் இருந்து குறிப்பிட்ட இடைவெளியில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் விழுப்புரம், திருச்சி, மதுரை, பெங்களூரு போன்ற பகுதிகளுக்கு அரசு பஸ்கள் மிக குறைவாக இயக்கப்பட்டது.
விழுப்புரத்துக்கு தனியார் பஸ்களே அதிகளவு இயக்கப்பட்டன. திருச்சி, மதுரை போன்ற இடங்களுக்கு செல்வதற்காக பஸ் நிலையம் வந்த பயணிகள் அவதி அடைந்தனர்.