அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைய கட்சியை விட்டு சசிகலா குடும்பத்தை தூக்கி எறிய வேண்டும்
அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைய கட்சியை விட்டு சசிகலா குடும்பத்தை தூக்கி எறிய வேண்டும், நத்தம் விசுவநாதன் பேட்டி
திண்டுக்கல்
அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைவதற்கு, கட்சியை விட்டு சசிகலாவின் குடும்பத்தை தூக்கி எறிய வேண்டும் என முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் தெரிவித்தார்.
மக்கள் தவிப்பு
திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா அணி சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் திண்டுக்கல் ஸ்பென்சர் காம்பவுண்டு பகுதியில் நடக்கிறது. இதற்காக அங்கு மேடை அமைக்கும் பணி நேற்று நடந்தது. இந்த பணிகளை முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பார்வையிட்டார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–
அரசு நினைத்திருந்தால் போக்குவரத்து தொழிற்சங்கத்தினரின் வேலை நிறுத்த போராட்டத்தை தவிர்த்திருக்கலாம். அவர்கள் திருப்திபடும் வகையில் அரசின் பேச்சுவார்த்தை அமைந்திருக்க வேண்டும். ‘யானைப்பசிக்கு சோளப்பொரி’ என்பது போல ரூ.7 ஆயிரம் கோடி கொடுப்பதற்கு பதிலாக ரூ.500 கோடி ஒதுக்கப்படும் என்றால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? எனவே, போக்குவரத்து தொழிலாளர்களை திருப்திபடுத்தும் வகையில் அரசு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
தூக்கி எறிய வேண்டும்
அ.தி.மு.க.வின் இரண்டு அணிகளும் நிச்சயம் இணையும். இதற்கு கட்சியை விட்டு சசிகலா குடும்பத்தை தூக்கி எறிய வேண்டும். ஜெயலலிதாவின் மர்ம மரணத்துக்கு நீதி விசாரணை நடத்த மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
பேனர், சுவரொட்டிகளில் சசிகலா படத்தை போடுவதால் அவர்களுக்குத்தான் (அ.தி.மு.க. அம்மா அணியினருக்கு) பின்னடைவு ஏற்படும். அவர்கள் வெற்று சுமையை தூக்கிக்கொண்டு இருக்கிறார்கள். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ராசி இல்லாத ஆள். அவர் செல்லும் இடமெல்லாம் பாதிப்புகள்தான் ஏற்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.