தூத்துக்குடியில் செல்லாத ரூபாய் நோட்டுகளுடன் 2 வாலிபர்கள் கைது கத்தை கத்தையாக பறிமுதல்

தூத்துக்குடியில் பழைய செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகளுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்யப்பட்டனர்.

Update: 2017-05-16 20:00 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடியில் பழைய செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகளுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்யப்பட்டனர்.

பழைய ரூபாய் நோட்டுகள்


தூத்துக்குடி மாவட்ட தனிப்படை போலீசாருக்கு, முத்தம்மாள் காலனி பகுதியில் சிலர் செல்லாத பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முயற்சி செய்வதாக தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபடுட்டனர். அப்போது தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி அருகே மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த வாலிபர்கள் 2 பேரை தென்பாகம் போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

2 வாலிபர்கள் கைது

விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி சங்கரபேரியை சேர்ந்த மாடசாமி மகன் விக்னேஷ் (வயது 24), சுந்தரவேல்புரத்தை சேர்ந்த பாண்டியன் மகன் மரிய ரகுநாத் (28) என்பதும், அவர்கள் பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சத்து 99 ஆயிரம் மதிப்புள்ள பழைய செல்லாத 500, 1,000 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த 2 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்