பல்லடம் அருகே அரசு பஸ் மீது கல்வீச்சு: மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் கைவரிசை
பல்லடம் அருகே அரசு பஸ் மீது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் கல்வீசி தாக்கினார்கள். இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்தது.
திருப்பூர்
அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் 90 சதவீத அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. 10 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. அதுவும் கனரக ஓட்டுனர் உரிமம் இல்லாத, ஓட்டுனர்களை வைத்து மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான அரசு பஸ்கள் இயக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். இதனால் பயணிகள் பஸ் வசதி கிடைக்காமல் தவிக்கின்றனர். சிலர் தங்களது பயணத்தை ரத்து செய்து விட்டனர்.
இதற்கிடையில் அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை முன்னிட்டு ஆம்னி பஸ்கள், தனியார் பஸ்கள், வேன்கள் மற்றும் மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் கட்டணம் கூடுதலாக வசூல் செய்யப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டுகிறார்கள். மேலும் ஷேர் ஆட்டோக்களிலும் கூட்டம் அலைமோதுகிறது.
கல்வீச்சு
இந்த நிலையில் ஒவ்வொரு பணிமனைகளிலும் வேலைக்கு வந்து இருந்த குறைந்த எண்ணிக்கையிலான டிரைவர்களை வைத்து அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி கரூரில் இருந்து கோவை நோக்கி ஒரு பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சை கரூரை சேர்ந்த டிரைவர் முருகானந்தம் ஓட்டினார். நடத்துனராக கரூரை சேர்ந்த நல்லசாமி இருந்தார். இந்த பஸ்சில் 26 பயணிகள் இருந்தனர். இந்த பஸ் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை கடந்து செம்பியம்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிரே ஒரு மோட்டார் சைக்கிளில் 2 மர்ம ஆசாமிகள் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் திடீரென்று தாங்கள் வைத்திருந்த கற்களை பஸ்கள் மீது வீசினார்கள்.
கண்ணாடி உடைந்தது
இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. பஸ் மீது கற்களை வீசிய ஆசாமிகள், அதே மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவத்தில் டிரைவர் மற்றும் பயணிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. இது குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அதையும் மீறி ஒரு சில பஸ்கள் இயக்கப்படுவதால், ஆத்திரம் அடைந்த மர்ம ஆசாமிகள் கற்களை வீசி இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.