திருப்பூரில் அரசு பஸ் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் பலி
திருப்பூரில் அரசு பஸ் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் பலி, தற்காலிக டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை
திருப்பூர்
திருப்பூரில் அரசு பஸ் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக அரசு பஸ்சை ஓட்டி வந்த தற்காலிக டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
கட்டிட தொழிலாளி
திருப்பூர் பாண்டியன் நகர் இந்திரா நகரை சேர்ந்தவர் பச்சையப்பன்(வயது 36). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று மதியம் தனது மோட்டார் சைக்கிளில் திருப்பூர்–மங்கலம் ரோட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது 2 பெண்கள் அவரை மறித்து தங்களை திருப்பூர் ரெயில் நிலையம் முன் இறக்கிவிடுமாறு உதவி கேட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து பச்சையப்பன் தனது மோட்டார் சைக்கிளின் பின்னால் அந்த 2 பெண்களையும் ஏற்றிக்கொண்டு நடராஜா தியேட்டர் ரோடு வழியாக சென்றார்.
அப்போது தாராபுரத்தில் இருந்து திருப்பூர் புதிய பஸ் நிலையம் நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சை தாராபுரத்தை சேர்ந்த கதிரவன்(33) என்பவர் ஓட்டி வந்தார். கண்டக்டராக தாராபுரத்தை சேர்ந்த விஜயராகவன்(30) இருந்தார். நடராஜா தியேட்டர் முன்பு பஸ் சென்று கொண்டிருந்தபோது, பச்சையப்பன் பஸ்சின் இடதுபுறமாக மோட்டார் சைக்கிளில் முந்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் ஒரு ஆட்டோ நின்று கொண்டிருந்தது. அதன் மீது மோதாமல் இருப்பதற்காக பச்சையப்பன் மோட்டார்சைக்கிளை திடீரென்று பிரேக் பிடித்ததாக கூறப்படுகிறது.
பெண் பலி
இதில் மோட்டார் சைக்கிள் சரிந்து அவர்கள் 3 பேரும் கீழே விழுந்தனர். மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்த 2 பெண்கள் மீதும் பஸ் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்றொரு பெண்ணுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பச்சையப்பனும் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து படுகாயம் அடைந்த பச்சையப்பன் மற்றும் ஒரு பெண்ணை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து நடந்ததும் பஸ்சை நிறுத்தி விட்டு டிரைவர் கதிரவன் ஓடிச்சென்று அருகில் உள்ள திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் மத்திய போலீசார் அங்கு விரைந்து வந்து பலியான பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தீவிர சிகிச்சை
போலீசார் நடத்திய விசாரணையில், விபத்தில் இறந்த பெண் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளத்தை சேர்ந்த வைஜெயந்தி(20) என்பதும், விபத்தில் படுகாயம் அடைந்த மற்றொரு பெண், கர்நாடக மாநிலம் பெல்லாரியை சேர்ந்த ஜெயா என்கிற நாகலட்சுமி(24) என்பதும் தெரியவந்தது.
திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில், ஜெயாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருப்பூர் மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் கதிரவனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்காலிக டிரைவர்
தமிழகத்தில், அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக, அரசு பஸ்களை தற்காலிகமாக டிரைவர் மற்றும் கண்டக்டர்களை பணியமர்த்தி இயக்கி வருகிறார்கள். திருப்பூரில் விபத்தில் சிக்கிய அரசு பஸ்சை ஓட்டி வந்த கதிரவன் தற்காலிக டிரைவர் ஆவார். அதுபோல் விஜயராகவனும் தற்காலிக கண்டக்டராவார். இந்த சம்பவம் திருப்பூரில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.