ஓச்சேரி அருகே கார் மோதி 4 பேர் காயம்
வாலாஜாவை அடுத்த செங்காடுமோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் மேகநாதன் (வயது 45).
பனப்பாக்கம்,
வாலாஜாவை அடுத்த செங்காடுமோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் மேகநாதன் (வயது 45). இவர் தனது மகள்கள் புவனேஸ்வரி (17), தீபா (9) மற்றும் உறவினர் ருக்மணி (42) ஆகியோருடன் ஓச்சேரியை அடுத்த சித்தஞ்சி கிராமத்தில் உள்ள சிவகாளீஸ்வரி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு ஊருக்கு திரும்பினர்.
வழியில் அவர்கள் நடந்து சென்றுகொண்டிருந்த போது, சென்னையில் இருந்து வேலூர் நோக்கி சென்ற கார் திடீரென அவர்கள் மீது மோதியது. இதில் 4 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து அவளூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.