காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி காவிரி உரிமை மீட்புக்குழுவினர் ரெயில் மறியல்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருவாரூரில் காவிரி உரிமை மீட்புக்குழுவினர் ரெயில் மறியலில் ஈடுபட முயன்றனர். இதில் 51 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-05-15 22:45 GMT
திருவாரூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். தீர்ப்பாய சட்ட முன்வடிவத்தை திரும்ப பெற வேண்டும். மேகதாதுவில் கர்நாடக அரசு புதிய அணை கட்டுவதை தடுக்க வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். கருகிய பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரமும், விவசாய தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ரூ.15 ஆயிரமும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவதாக காவிரி உரிமை மீட்புக்குழு அறிவித்து இருந்தது.

51 பேர் கைது


அதன்படி நேற்று திருவாரூர் ரெயில் நிலையத்தில் காவிரி உரிமை மீட்புக்குழுவினர் நகர பொறுப்பாளர் கலைச்செல்வன் தலைமையில் தண்டவாளத்தில் அமர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தியும், ஒற்றை தீர்ப்பாயத்திற்கு கண்டனம் தெரிவித்தும் கோ‌ஷங்கள் எழுப்பினர் இதனை தொடர்ந்து ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற 51 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்