கயத்தாறு அருகே பஸ்- மோட்டார் சைக்கிள் மோதல்; பெயிண்டர் பலி

கயத்தாறு அருகே பஸ்-மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் பெயிண்டர் பரிதாபமாக பலியானார்.

Update: 2017-05-15 22:45 GMT
கயத்தாறு,

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள மெய்தலைவன்பட்டியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 50) பெயிண்டர். இவர் நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு, இரவில் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அவர் கயத்தாறு அருகே தளவாய்புரம் நாற்கர சாலையை கடக்க முயன்றார். அப்போது மதுரையில் இருந்து நெல்லை நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாரிமுத்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மோதிய வேகத்தில் பஸ்சின் முன்பக்க கண்ணாடியும் நொறுங்கியது.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்ததும், கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த மாரிமுத்துவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாரிமுத்துவுக்கு ராமலட்சுமி என்ற மனைவியும், அருண்குமார் என்ற மகனும், பானுபிரியா என்ற மகளும் உள்ளனர்.

மேலும் செய்திகள்