பெற்றோர்கள் எதிர்ப்பு: காதல் ஜோடி விவசாய சங்கத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்
பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், காதல் ஜோடி வீட்டைவிட்டு வெளியேறி கோவிலில் விவசாய சங்கத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
ஹாசன்,
சிக்கமகளூரு அருகே உள்ள கலசாபுரா கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ்(வயது 23). இவர் சிக்கமகளூரு டவுன் ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதேப்பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியான பானுப்பிரியா(20) என்பவருக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் இவர்களின் காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியவந்தது. 2 பேரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் 2 பேரின் பெற்றோர்களும் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் காதல் ஜோடி தங்களது காதலில் உறுதியாக இருந்தனர்.
கோவிலில் திருமணம்
இந்த நிலையில் பானுப்பிரியாவுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர். இதனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பானுப்பிரியா வீட்டைவிட்டு வெளியேறினார். அதேப் போல் சந்தோசும் தனது வீட்டில் இருந்து வெளியேறினர். பின்னர் சந்தோசும், பானுப்பிரியாவும் ஹாசன் மாவட்டம் பேளூர் டவுனுக்கு வந்தனர்.
இதையடுத்து சந்தோஷ், பேளூர் விவசாய சங்கத் தலைவரான பெல்லூர் சுவாமிகவுடாவை சந்தித்து தங்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால் நீங்கள் தான் எங்களுக்கு திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அப்போது சுவாமிகவுடா சந்தோசுக்கும், பானுப்பிரியாவுக்கும் திருமணம் செய்து வைப்பதாக கூறினார். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் பேளூர் டவுனில் உள்ள சென்னகேஷ்வரா கோவிலில் சந்தோசும், பானுப்பிரியாவும் விவசாய சங்கத்தினர் முன்னிலையில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
வாழ்த்து
புதுமண தம்பதிகளுக்கு விவசாய சங்க தலைவர் சுவாமிகவுடாவும், விவசாய சங்கத்தினரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் காதல் ஜோடியின் நண்பர்களும் இந்த திருமணத்தில் கலந்துகொண்டு வாழ்த்துகள் கூறினர்.
இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.