முந்தைய அரசில் நடந்த நீர்ப்பாசன ஊழலுக்கும், நீர் சேமிப்பு திட்ட முறைகேட்டுக்கும் என்ன வித்தியாசம்?
‘‘முந்தைய காங்கிரஸ்– தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசில் நடந்த நீர்ப்பாசன ஊழலுக்கும், நீர் சேமிப்பு திட்ட முறைகேட்டுக்கும் என்ன வித்தியாசம்?’’ என்று உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பினார்.
மும்பை,
முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான மராட்டிய அரசின் தலையாய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக கருதப்படுவது, நீர் சேமிப்பு திட்டம் (ஜல்யுக்த் ஷிவார் யோஜனா). இந்த நிலையில், தேவேந்திர பட்னாவிஸ் அரசில் கேபினட் அந்தஸ்தில் இருக்கும் சுற்றுச்சூழல் துறை மந்திரியும், சிவசேனா மூத்த தலைவருமான ராம்தாஸ் கதம், நீர் சேமிப்பு திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டினார்.
அதாவது, நீர் சேமிப்பு திட்டத்தின்கீழ் ரத்னகிரி மாவட்டம் தபோலி, கேத் மற்றும் மண்டங்காட் ஆகிய தாலுகாக்களில் வெறும் காகித அளவில் தான் பணிகள் நடைபெற்று இருப்பதாகவும், எந்தவொரு பணியும் நிறைவடையாமல் அதிகாரிகள் ரூ.10 கோடி மதிப்பிலான ரசீதுக்கு ஒப்புதல் அளித்திருப்பதாகவும் மந்திரி ராம்தாஸ் கதம் குற்றம்சாட்டினார். மேலும், இந்த முறைகேடு தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அவரது இந்த குற்றச்சாட்டு அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உத்தவ் தாக்கரே பேட்டி
இந்த நிலையில், மாநிலம் முழுவதும் விவசாயிகளுடன் கலந்துரையாடி வரும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, நேற்று அகோலாவில் இந்த குற்றச்சாட்டு குறித்து நிருபர்களிடம் கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:–
நீர் சேமிப்பு திட்டத்தில் முறைகேடு நடைபெற்று இருக்கிறது என்றால் இந்த திட்டத்துக்கும், முந்தைய காங்கிரஸ்– தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசில் நடைபெற்ற நீர்ப்பாசன ஊழலுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?. நீர் சேமிப்பு திட்டத்தின்கீழ், மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
மேலும், நீர் சேமிப்பு திட்டத்தில் ஏதாவது முறைகேடுகளை பொதுமக்கள் கண்டறிந்தால், அதனை சிவசேனாவிடம் தெரியப்படுத்துங்கள். தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிப்பதை சிவசேனா உறுதிச்செய்யும். இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
ராவ்சாகேப் தன்வேக்கு ஆலோசனை
அத்துடன், விவசாயிகளின் நிலை குறித்து பாரதீய ஜனதா மாநில தலைவர் ராவ்சாகேப் தன்வே ஆட்சேபனைக்குரிய வகையில் பேசியது குறித்து கருத்து தெரிவித்த உத்தவ் தாக்கரே, ‘‘விவசாயிகள் தங்களுக்காக குரல் கொடுக்கும் அளவிற்கு திறனுடையவர்களாக மாற வேண்டும். விவசாயிகள் தங்கள் குரல் ஒலிக்க மன்றத்தை நாடுகிறார்கள். ஒருவர் விவசாயிகள் பற்றி பேசும்போது, அராஜக மற்றும் தவறான வார்த்தைகளை பயன்படுத்த கூடாது’’ என்றார்.