சென்னை நகரின் குடிநீர் தேவைக்கு சிக்கராயபுரம் கல்குவாரியில் தண்ணீர் எடுக்கும் பணி

சென்னை நகரின் குடிநீர் தேவைக்கு சிக்கராயபுரம் கல்குவாரியில் தண்ணீர் எடுக்கும் பணி, குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் ஆய்வு

Update: 2017-05-15 22:00 GMT
சென்னை,

பருவமழை பொய்த்தல், வெப்பத்தாக்கம் அதிகரிப்பு ஆகிய காரணங்களால் தமிழகத்தில் வறட்சி தலைவிரித்தாடுகிறது. தலைநகர் சென்னையிலும் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. சென்னை நகரில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க குடிநீர் வாரியம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு கட்டமாக சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள 22-க்கும் மேற்பட்ட கல்குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கான ஆயத்தப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. அதன்படி சிக்க ராயபுரம் கல்குவாரிகளில் இருந்து செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்துக்கு குடிநீரை கொண்டு செல்வதற்கு குழாய்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இப்பணிகளை சென்னை குடிநீர் வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் வி.அருண்ராய் நேற்று ஆய்வு செய்தார். அப்போது பொறியியல் இயக்குனர் லட்சுமணன் மற்றும் பொறியாளர்கள் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்