கும்மிடிப்பூண்டி அருகே மதுக்கடையில் கொள்ளை

கும்மிடிப்பூண்டி அருகே மதுக்கடையில் கொள்ளை: போலீஸ் விசாரணை

Update: 2017-05-15 21:30 GMT
கும்மிடிப்பூண்டி

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த தச்சூர் கூட்டுசாலை அருகே உள்ள போரக்ஸ் பகுதியில் மதுக்கடை உள்ளது. இந்த கடையில் மேற்பார்வையாளராக ஆரணியைச்சேர்ந்த ஜெயச்சந்திரன்(வயது 45), விற்பனையாளர்களாக கொசவம்பேட்டையைச் சேர்ந்த வேலு(40), குமார் ஆகியோர் உள்ளனர்.

இந்தநிலையில் டாஸ்மாக் மண்டல மேலாளர் ராமசந்தர்(53) கவரைப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதில், “மதுக்கடை ஊழியர்கள் 3 பேரையும் மர்மநபர்கள் தாக்கி, மதுக்கடையில் இருந்த ரூ.8 லட்சத்து 48 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றதாக முதலில் கூறினர். ஆனால் கடையில் சோதனை செய்த போது ரூ.4 லட்சத்து 64 ஆயிரம் பத்திரமாக இருந்தது. மீதி உள்ள பணம் மாயமானது பற்றி தெரியவில்லை. இது தொடர்பாக கடை ஊழியர்கள் 3 பேரிடமும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறி இருந்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் கடை மேற்பார்வையாளர் ஜெயச்சந்திரன், விற்பனையாளர்கள் வேலு, குமார் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்