விருதுநகர், திருத்தங்கல், ராஜபாளையம் பகுதியில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு கலெக்டரிடம் மனு கொடுத்தனர்
விருதுநகர், திருத்தங்கல், ராஜபாளையம் பகுதிகளில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொது மக்கள் நேற்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
விருதுநகர்,
டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிராக போராட்டம் நடத்தப்படுவதோடு பொதுமக்கள் திங்கட்கிழமை தோறும் விருதுநகரில் நடத்தப்படும் பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டத்தின்போது கலெக்டர் சிவஞானத்திடமும் மனு கொடுத்து வருகின்றனர்.
நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சியின் போது கலெக்டர் சிவஞானத்திடம் ராஜபாளையம் ஆவராம்பட்டி, விருதுநகர் கலைஞர் நகர், திருத்தங்கல் 52 வீட்டு காலனி ஆகிய பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தார்கள்.
ஆவரம்பட்டி
ஆவரம்பட்டி கிராமத்தினர் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
ராஜபாளையம் ஆவரம்பட்டி பகுதியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நெருக்கமான குடியிருப்புகளுக்கிடையே டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டுள்ளது. மது குடிப்போர் இங்குள்ள வீடுகளுக்கு முன் படுத்துக் கொண்டு தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த கடையை அகற்றக்கோரி கடந்த 11–ந்தேதி காத்திருக்கும் போராட்டம் நடத்திய போது அதிகாரிகள் இந்த கடையை அகற்றுவதாக உறுதியளித்தனர். ஆனால் இதுவரை அகற்றப்படவில்லை. எனவே கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியுள்ளனர்.
52 வீட்டு காலனி
திருத்தங்கல் 52 வீட்டு காலனி பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில், தங்கள் பகுதியில் திறக்கப்பட்ட மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை பேராராட்டம் நடத்தப்பட்டதால் கடை அதிகாரிகளால் தற்காலிகமாக மூடப்பட்டது என்றும், இக்கடையினால் மிகுந்த பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளதால் அந்த கடையை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறும் கோரியுள்ளனர்.
கலைஞர் நகர்
விருதுநகர் கலைஞர் நகர் பகுதி பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவில் 4 வழிச்சாலையில் மூடப்பட்ட மதுக்கடையை தங்களது குடியிருப்பு பகுதியில் திறக்க நடவடிக்கை எடுப்பதாகவும் இதனால் எங்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளதால் இந்த கடையை எங்கள் பகுதியில் திறக்க அனுமதிக்க கூடாது எனவும் கோரியுள்ளனர்.