பருவமழை பொய்த்ததால் வெளிநாட்டு பறவைகள் ஏமாற்றம்: வேடந்தாங்கலுக்கு இந்த ஆண்டு 22 ஆயிரம் பறவைகளே வருகை
பருவமழை பொய்த்ததால் வெளிநாட்டு பறவைகள் ஏமாற்றம்: வேடந்தாங்கலுக்கு இந்த ஆண்டு 22 ஆயிரம் பறவைகளே வருகை, ஜூன் 1-ந்தேதி சரணாலயத்தை மூட முடிவு
சென்னை,
இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் வேடந்தாங்கல் சரணாலயத்துக்கு வரும் வெளிநாட்டு பறவைகள் ஏமாற்றம் அடைந்தன. இதுவரை 22 ஆயிரம் பறவைகளே வந்து சென்றுள்ளன. ஜூன் 1-ந்தேதி சரணாலயத்தை மூட வனத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
பறவைகள் சரணாலயம்
சென்னையை அடுத்த காஞ்சீபுரம் மாவட்டத்தில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ளது. தமிழகத்திலேயே பெரிய சரணாலயமான இங்கு ஆண்டு தோறும் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கும் அக்டோபர் மாதம் முதல் வெளிநாட்டு பறவைகள் வரத்தொடங்கும்.
ஆஸ்திரேலியா, சைபீரியா, பர்மா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 26 வகையான பறவைகள் இங்கு வந்து செல்லும்.
பருவமழை பொய்த்தது
அந்தவகையில் ஒவ்வொரு ஆண்டும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு வந்து செல்வது உண்டு. வடகிழக்கு பருவமழை பெய்யும் காலத்தில் இங்கு வருவதால் இங்கேயே கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சு பொறித்து, அதற்கு பறக்க கற்றுக்கொடுத்து அதன்பிறகு தனது சொந்த நாட்டுக்கு புதிய குடும்பத்தோடு இந்த பறவைகள் பறந்து செல்லும்.
வழக்கம்போலவே இந்த ஆண்டும் ஆகஸ்டு மாதம் தொடக்கத்திலேயே வெளிநாட்டு பறவைகள் வேடந்தாங்கலுக்கு வரத்தொடங்கின. கணிசமான பறவைகள் வருகை தந்ததையொட்டி கடந்த செப்டம்பர் மாதம் 30-ந்தேதி வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் திறக்கப்பட்டது. ஆனால் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு பொய்த்து போனதால் ஏரியில் போதிய அளவு நீர் இல்லை.
ஏமாற்றம்
வேடந்தாங்கலை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏரிகுளங்களும் நீரின்றி வறண்டு போனது. இதனால் கடும் சிரமத்துக்கு மத்தியில் மழையை எதிர்பார்த்து காத்திருந்த வெளிநாட்டு பறவைகளுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.
டிசம்பர் மாதத்தில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் வெளிநாட்டு பறவைகள் ஜனவரி மாதம் முதல் சொந்த நாட்டுக்கு திரும்ப தொடங்கின.
22 ஆயிரம் பறவைகள்
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் இங்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை கணக்கிடப்படுவது வழக்கம். அந்தவகையில் கடந்த ஆண்டு வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, ஒவ்வொரு ஆண்டும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் வேடந்தாங்கல் சரணாலயத்துக்கு வந்து சென்றுள்ளன.
ஆனால் இந்த ஆண்டு பறவைகள் கணக்கெடுப்பின் போது எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. அதாவது கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடந்த போது மொத்தம் 22 ஆயிரம் பறவைகளே அங்கு தங்கி இருந்தன.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ஜூன் 1-ந்தேதியுடன்...
இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக வேடந்தாங்கல் ஏரியிலும், அதனை சுற்றியுள்ள ஏரிகுளங்களிலும் போதிய அளவு நீர் இல்லை. இதனால் வெளிநாட்டு பறவைகள் ஏமாற்றம் அடைந்தன. பொறுத்து பார்த்த அந்த பறவைகளும் வேறு வழியில்லாமல் ஜனவரி மாதம் முதலே சொந்த நாடுகளுக்கு திரும்பி சென்றுவிட்டன.
இந்த ஆண்டு ஒரு லட்சம் பார்வையாளர்கள் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு வந்து சென்றுள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் கூழைக்கடா பறவைகள் ஆயிரம் எண்ணிக்கையிலேயே அங்கு உள்ளன. மற்ற வகையான பறவைகள் எதுவும் அங்கு இல்லை. இதனால் பார்வையாளர்கள் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது.
எனவே ஜூன் 1-ந்தேதியுடன் பறவைகள் சரணாலயத்தை மூட திட்டமிட்டுள்ளோம். இனி அக்டோபர் மாதம் பருவமழை பெய்ய தொடங்கும்போது தான் வெளிநாட்டு பறவைகள் வரத்தொடங்கும். சுமார் 5 ஆயிரம் பறவைகள் வந்த உடன் பறவைகள் சரணாலயம் திறக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.