மருத்துவ விடுமுறை அனுமதிக்க லஞ்சமாக மதுபாட்டில் வாங்கிய மாநகராட்சி அதிகாரி கைது
மருத்துவ விடுமுறை அனுமதிக்க மதுபாட்டிலை லஞ்சமாக வாங்கிய மாநகராட்சி அதிகாரி கைது செய்யப்பட்டார்.
மும்பை,

மதுபாட்டில் லஞ்சம்
புனே மாவட்டம் பிம்ப்ரி- சிஞ்ச்வாட் மாநகராட்சியின் ‘இ’ வார்டு உதவி சுகாதார அதிகாரியாக இருப்பவர் தானாஜி (வயது50). இவரிடம் கடந்த சில தினங்களுக்கு முன் துப்புரவு பணியாளர் ஒருவர் சில மாதங்களுக்கு மருத்துவ விடுப்பு கேட்டு விண்ணப்பித்து இருந்தார். இதை பரிசீலித்த அதிகாரி தானாஜி மருத்துவ விடுப்பில் செல்ல அனுமதிப்பதற்கு அவரிடம் ஒரு பாட்டில் மது மற்றும் ரூ.10 ஆயிரம் லஞ்சமாக கேட்டு இருக்கிறார்.
அதிகாரி கைது
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த துப்புரவு பணியாளர் இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் கொடுத்தார். பின்னர் அவர்கள் கொடுத்த யோசனையின்படி நேற்றுமுன்தினம் அவர் வார்டு அலுவலகத்தின் வெளியே தானாஜியை சந்தித்து அவரிடம் தான் கொண்டு வந்த மதுபாட்டிலை கொடுத்தார். அதை வாங்கியபோது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிகாரி தானாஜியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.