விருத்தாசலம் பாத்திமா அன்னை ஆலயத்தில் ஆடம்பர தேர் பவனி

விருத்தாசலம் தூய பாத்திமா அன்னை ஆலயத்தில் ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2017-05-14 20:25 GMT
விருத்தாசலம்,

விருத்தாசலத்தில் தூய பாத்திமா அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆடம்பர தேர் பவனி சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான ஆடம்பர தேர் பவனி கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் ஆலயத்தில் சிறிய தேர் பவனி நடைபெற்றது.

மேலும் சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி இரவு 7 மணிக்கு பங்கு தந்தை ஆரோக்கியதாஸ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடந்தது.

ஆடம்பர தேர்

பின்னர் வண்ணமலர் களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் தூயபாத்திமா சொருபம் வைக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த திரளான கிறிஸ்தவர்கள் ஆடம்பர தேரை இழுத்தனர். தேர் ஜங்ஷன் ரோடு, எம்.ஆர்.கே.நகர் வழியாக மீண்டும் ஆலயத்துக்கு வந்தது. இதையடுத்து ஆலயத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது.

மேலும் செய்திகள்