நாகர்கோவில்,
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து திங்கள்நகர் அருகே உள்ள கொடுமுட்டிக்கு நேற்றிரவு 7.45 மணிக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. இந்த பஸ் நாகர்கோவில் செட்டிக்குளம் சந்திப்பு பஸ்நிறுத்தத்தில் ஆட்களை ஏற்றிக்கொண்டு புறப்படும் சமயத்தில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி ‘டமார்’ என உடையும் சத்தம் கேட்டது. உடனே டிரைவர் ரமேஷ் பஸ்சை நிறுத்தினார். அப்போது, வாலிபர் ஒருவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
இதுபற்றி டிரைவர் ரமேஷ் கோட்டார் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவுசெய்து, போக்குவரத்து தொழிாளர்களின் வேலைநிறுத்தபோராட்டம் காரணமாக யாரேனும் கல்வீச்சில் ஈடுபட்டனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.