குடிநீர் உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 16 மின் மோட்டார்கள் பறிமுதல்
வேளாங்கண்ணி பேரூராட்சியில் குடிநீர் உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 16 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி வேளாங்கண்ணி பேரூராட்சியில் பொது மக்களுக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்ய அனுமதி பெறாத குடிநீர் இணைப்புகள் மற்றும் மின் மோட்டார்கள் மூலம் குடிநீர் உறிஞ்சும் வீடுகளை கண்டறிந்து இணைப்புகளை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வேளாங் கண்ணி பகுதியில் செயல் அலுவலர் குருராஜன் தலைமையில், மணல்மேடு பேரூராட்சி செயல் அலுவலர் மோகனரங்கள், தலைஞாயிறு பேரூராட்சி செயல் அலுவலர் சிவகுமார், கீழ்வேளூர் பேரூராட்சி செயல் அலுவலர் கமலகண்ணன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
16 மின் மோட்டார்கள் பறிமுதல்
வேளாங்கண்ணியில் உள்ள வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் பல வீடுகளில் குடிநீர் குழாய்களில் மின் மோட்டார்கள் பொருத்தி குடிநீர் எடுப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து குடிநீர் குழாய்களில் குடிநீர் உறிஞ்ச பயன்படுத் தப்பட்ட 16 மின் மோட்டார்கள் மற்றும் பிளாஸ்டிக் பைப்புகள், குழாய்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட இடங்களில் உள்ள குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. பின்னர் சட்ட விரோதமாக குடிநீரை எடுத்து பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். மேலும், குடிநீர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன் படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினர்.