ஓசூரில் அரசு பஸ்கள் திடீர் நிறுத்தம் பயணிகள் அவதி
ஓசூரில் அரசு பஸ்கள் திடீரென நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
ஓசூர்,
13-வது ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அவர்களின் நிலுவைத்தொகையை கணக்கிட்டு வழங்கிட வேண்டும் என்பன உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (திங்கட்கிழமை) முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த பல்வேறு தொழிற்சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து நேற்று போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் நேற்று மாலையே கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் திடீரென அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டன. மேலும் பஸ்சின் டிரைவர்கள் பஸ்சை ஓசூர் பணிமனையில் நிறுத்திவிட்டு அதிகாரிகளிடம் சாவியை கொடுத்து சென்றனர். மேலும் ஓசூரில் இருந்து பெங்களூருவுக்கு சென்ற தமிழக அரசு பஸ்கள் பெங்களூருவிலேயே நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் ஓசூரில் இருந்து சுற்று வட்டார பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தள்ளு, முள்ளு
ஒரு சில புறநகர் பஸ்களும், தனியார் பஸ்களும் மட்டுமே இயக்கப்பட்டன. ஆனால் அந்த பஸ்களிலும் கூட்டம் அலைமோதியதால் பயணிகள் ஒருவரையொருவர் முண்டியடித்துக்கொண்டு ஏறினர். அப்போது அவர்களுக்குள் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. மேலும் பலர் பஸ்களில் ஏற முடியாமல் தவித்து நின்றனர். இதன் காரணமாக நேற்று ஓசூர் பஸ் நிலையம் எங்கும் பயணிகள் கூட்டமாக காணப்பட்டது.
இதுகுறித்து ஓசூர் போக்குவரத்து அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- நாளை (அதாவது இன்று) பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்று டிரைவர்களை கொண்டு வழக்கம் போல பஸ்கள் இயக்கப்படும் என்றார். ஓசூரில் நேற்று மாலையில் திடீரென பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பஸ்நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.