தண்டவாளம் பராமரிப்பு பணி: நாகர்கோவில் மும்பை எக்ஸ்பிரஸ் தாமதமாக புறப்படும் தெற்கு ரெயில்வே அறிவிப்பு
தண்டவாளம் பராமரிப்பு பணி: நாகர்கோவில் மும்பை எக்ஸ்பிரஸ் தாமதமாக புறப்படும் தெற்கு ரெயில்வே அறிவிப்பு
திருவனந்தபுரம்
தெற்கு ரெயில்வேயின் திருவனந்தபுரம் கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–
திருச்சி ரெயில்வே மண்டலத்தில் தண்டவாளம் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் நாகர்கோவில்– மும்பை எக்ஸ்பிரஸ் (ரெயில் எண் 16352) மே 14(இன்று) மற்றும் 18–ந் தேதிகளில் காலை 5 மணிக்கு பதிலாக 6.10 மணிக்கு புறப்படும். 21–ந் தேதி காலை 7 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.