திருச்சொந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் மாணவர்சேர்க்கை

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

Update: 2017-05-13 22:30 GMT

திருச்செந்தூர்,

திருச்செந்தூரில் ஆதித்தனார் கல்வி அறநிலையத்தின் கீழ் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி, பத்ம ஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் போன்ற கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

இத்துடன் மாணவர்கள் உடற்கல்வித் துறையிலும் உடலுரத்திலும் வளர்ச்சியடைய வேண்டும் என்ற நோக்கில் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் 1993–94–ம் ஆண்டில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியையும் நிறுவினார்.

சிறப்பு அம்சங்கள்

இக்கல்லூரியில் இளங்கலை உடற்கல்வியியல் (B.P.Ed., இருவருட படிப்பு) முதுகலை உடற்கல்வியியல் ( M.P.Ed., இருவருட படிப்பு) நிறைஞர் உடற்கல்வியியல் (M.Phil, ஒரு வருடம்) பட்டபடிப்பு ஆகிய பாடப்பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இக்கல்லூரி சென்னை, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்றது. மேலும் தேசிய தர மதிப்பீட்டு குழு மறு மதிப்பீட்டில் ‘A’ சான்று வழங்கியது சிறப்பு அம்சமாகும்.

உலக அளவிலான உள்விளையாட்டு அரங்கம், வெளி விளையாட்டுகளுக்கு தேவையான விளையாட்டு மைதானங்கள், தரமான ஓட்டப்பாதை, தரம் வாய்ந்த உடற்கல்வி அறிவியல் ஆய்வகங்கள், தரமான நூலகம் ( 3,500 புத்தகங்கள் மற்றும் 7 உலகத்தர விளையாட்டு இதழ்கள், 14 தேசிய தர விளையாட்டு இதழ்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது) உள்ளிட்ட சிறப்பம்சங்களை கொண்டது.

வேலை வாய்ப்பு

மேலும், இக்கல்லூரி திறமை வாய்ந்த பேராசிரியர் குழு, நூறு சதவீத தேர்ச்சி, பல்கலைக்கழக அளவிலான விளையாட்டு வீரர்கள் தேர்வு, சிறந்த உடற்கல்வி வல்லுநர்களுடன் கலந்தாய்வு, இருபாலரும் தங்குவதற்கு தனித்தனி விடுதி வசதி, போன்றவற்றை கொண்டு உள்ளது.

ஒவ்வொரு வருடமும் பல்கலைக்கழக அளவில் மாணவ–மாணவிகள் பதக்கங்களை பெற்று வருகின்றனர். பொது மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பினை பெற உதவி செய்வதோடு, NET மற்றும் SET தேர்வுகளுக்கு சிறந்த பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

கல்லூரியில் பயிலும் மாணவ–மாணவிகள் அனைவரும் வேலைவாய்ப்பு பெற கல்லூரி நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு மாணவ–மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு சார்ந்த பயிற்சி அளித்து வருகிறது.

மாணவர் சேர்க்கை

இக்கல்லூரியில் B.P.Ed., M.P.Ed., மற்றும் M.Phil பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

B.P.Ed. சேர குறைந்தபட்ச கல்வி தகுதி இளநிலையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கிடையேயான ஏதேனும் ஒரு விளையாட்டு போட்டியில் பங்கெடுத்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

கல்லூரியில் சேர விரும்பும் மாணவ–மாணவிகள் 04639–245110 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும். அரசு நிர்ணயம் செய்த கல்வி கட்டணம் மட்டுமே செலுத்த வேண்டும். இதனை கல்லூரி முதல்வர் செ.பெவின்சன் பேரின்பராஜ் அறிவித்து இருக்கிறார்.

மேலும் செய்திகள்