குற்றவாளிகளுடன் தொடர்பு இருந்ததாக போலீஸ் சூப்பிரண்டு பணி இடைநீக்கம்
புதுவை தொழிலதிபர் கொலை வழக்கில் குற்றவாளிகளுடன் தொடர்பு இருந்ததாக கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டை பணி இடைநீக்கம் செய்து டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் உத்தரவிட்டு உள்ளார்.
புதுச்சேரி,
புதுவை மாநிலம் திருபுவனை சின்னபேட் பகுதியைச் சேர்ந்தவர் வேலழகன். தொழிலதிபர். இவர் கடந்த மாதம் 19-ந் தேதி வெடிகுண்டுகள் வீசி, வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி, சன்னியாசிகுப்பத்தை சேர்ந்த கார்த்திகேயன் என்கிற ரமேஷ் (வயது 36), சிவராமன் என்கிற சிவராமகிருஷ்ணன் (22), செங்கதிரவன் (44), தொழிலதிபர் உதயகுமார் (44) ஆகியோர் உள்பட 6 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ரவுடி ஜனாவை போலீசார் தேடி வருகிறார்கள்.
ரகசிய விசாரணை
இந்த வழக்கில் போலீஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேலழகனின் உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த வழக்கில் போலீஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக பகிரங்கமாக புகார்கள் எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் ரகசிய விசாரணை நடத்தினார்கள். இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு முக்கிய ஆதாரங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. மேலும் வேலழகன் கொலையில் கைது செய்யப்பட்டவர்களின் செல்போன் அழைப்புகளின் விவரங்களை சேகரித்தனர். அப்போது அவர்கள் யாருடன் எல்லாம் தொடர்பு கொண்டு பேசினார்கள் என்பது குறித்து ஆய்வு செய்தனர்.
பணி இடைநீக்கம்
இதில், வேலழகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவர், கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு தெய்வசிகாமணியுடன் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்தது. இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக புதுவை உள்துறைக்கு, கவர்னர் கிரண்பெடி பரிந்துரை செய்தார்.
புதுவை உள்துறையின் நடவடிக்கையின் படி, புதுவை போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம், கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு தெய்வசிகாமணியை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். கொலையாளிகளுடன் போலீஸ் சூப்பிரண்டே தொடர்பு வைத்திருந்த சம்பவம் போலீஸ் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.