லாரி மூலம் குடிநீரை பெற தொலைபேசி வழியாக முன்பதிவு செய்யலாம்
லாரி மூலம் குடிநீரை பெற தொலைபேசி வழியாக முன்பதிவு செய்யலாம் என சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
சென்னை,
லாரிகள் மூலம் குடிநீர் பெற விரும்பும் பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு, சென்னை குடிநீர் வாரியம் இணையவழி முன்பதிவு (ஆன்–லைன் புக்கிங்) மற்றும் ஒருமுகப்படுத்தப்பட்ட முன்பதிவு (சென்டிரலைஸ்டு புக்கிங்) எனும் 2 புதிய சேவைகளை கடந்த 8–ந்தேதி முதல் அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தி வருகிறது.
சென்னை குடிநீர் வாரியத்தால் இந்த 2 சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் லாரி மூலம் குடிநீர் பெற விரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு ஏற்கனவே நடைமுறையில் உள்ள அந்தந்த பகுதிகளுக்கு உட்பட்ட நீர்நிரப்பு மையங்களில் தொலைபேசி மூலம் பதிவு செய்யும் நடைமுறையும் தொடர்ந்து செயல்படும். பொதுமக்கள் அந்த வசதியையும் பயன்படுத்தி கொள்ளலாம்.
மேற்கண்ட தகவல்கள் சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.