பிளஸ்–2 தேர்வில் சி.இ.ஓ.ஏ. பள்ளி மாணவர்கள் சாதனை பல்வேறு பாடங்களில் 166 பேர் 200–க்கு 200 மதிப்பெண் பெற்றனர்

தமிழகத்தில் பிளஸ்–2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

Update: 2017-05-12 19:18 GMT

மதுரை,

தமிழகத்தில் பிளஸ்–2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. மதுரை கோசாகுளத்தில் உள்ள சி.இ.ஓ.ஏ. மெட்ரிக் பள்ளி மாணவ– மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். அதன்படி இந்த பள்ளி மாணவி ஹேமா, பிளஸ்–2 தேர்வில் 1,193 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதல் இடத்தை பிடித்தார். அவர் தமிழ்–199, ஆங்கிலம்–195, இயற்பியல்–200, வேதியியல்–200, கணிதம்–200, உயிரியல்–199 என ஒவ்வொரு பாடத்திலும் மதிப்பெண் பெற்றுள்ளார்.

1,190 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் 2–ம் இடத்தை மாணவன் போத்திகண்ணன் பிடித்தார். இதுபற்றி பள்ளி தலைவர் ராஜாகிளைமாக்ஸ் கூறுகையில், "சி.இ.ஓ.ஏ. பள்ளியில் பிளஸ்–2 படித்த மாணவர்களில் கணித பாடத்தில் 79 பேரும், இயற்பியல் பாடத்தில் 2 பேரும், வேதியியலில் 21 பேரும், உயிரியலில் 6 பேரும், வணிகவியலில் 25 பேரும், கணக்குப்பதிவியல் பாடத்தில் 16 பேரும், வணிக கணிதத்தில் 5 பேரும், கணினிஅறிவியலில் 10 பேரும், பொருளியல் பாடத்தில் 2 பேரும் என மொத்தம் 166 மாணவர்கள் பல்வேறு பாடங்களில் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். இதில் 16 மாணவர்கள் 1180 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று ஏ கிரேடு நிலையை அடைந்துள்ளனர்" என்றார்.

இந்த மாணவர்களை பள்ளி தலைவர் ராஜாகிளைமாக்ஸ், இணைத்தலைவர் சாமி, நிர்வாகிகள் பாக்கியநாதன், சவுந்திரபாண்டி, அசோக்ராஜ், விக்டர்தனராஜ், ஜெயச்சந்திரபாண்டி, பிரகாஷ், பள்ளி முதல்வர்கள் ஹேமாஆட்ரே, நசீம்பானு ஆகியோர் பாராட்டினார்கள்.

மேலும் செய்திகள்