கொங்கணாபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை திருட்டு
கொங்கணாபுரத்தை அடுத்த மடத்தூர் வைத்தீஸ்வரன் கோவில் அருகில் வசித்து வருபவர் ராசு (வயது 70).
எடப்பாடி,
கொங்கணாபுரத்தை அடுத்த மடத்தூர் வைத்தீஸ்வரன் கோவில் அருகில் வசித்து வருபவர் ராசு (வயது 70). கல் உடைக்கும் தொழிலாளி. நேற்று முன்தினம் இவரது மனைவி ஏரி வேலைக்கு சென்று விட்டார். ராசு வீட்டை பூட்டிவிட்டு பக்கத்தில் உள்ள டீ கடைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 3 பவுன் நகையை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ராசு எடப்பாடி போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம நபரை தேடி வருகிறார்.