கள்ளக்குறிச்சி பகுதியில் குடிநீர் கிணறுகள் தூர்வாரும் பணியை மாவட்ட திட்ட இயக்குனர் ஆய்வு
கள்ளக்குறிச்சி பகுதியில் குடிநீர் கிணறுகள் தூர்வாரும் பணியை மாவட்ட திட்ட இயக்குனர் மகேந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
கள்ளக்குறிச்சி,
தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை போதிய அளவில் பெய்யாமல் பொய்த்து போனது. இதனால் ஏராளமான ஏரி, குளங்கள், கிணறுகள் தண்ணீர் இன்றி வறண்டன. இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் திட்ட பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு விழுப்புரம் மாவட்ட திட்ட இயக்குனர் மகேந்திரன் தலைமை தாங்கி பேசினார்.
குடிநீர் தட்டுப்பாடு
அப்போது அவர் கூறுகையில், தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் பல்வேறு கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனவே குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கூடுதலாக ஆழ்துளை கிணறு அமைத்தல், சேதமடைந்த குடிநீர் தொட்டிகளை சீரமைத்தல், திறந்த வெளி குடிநீர் கிணறுகளை தூர் வாருதல் உள்ளிட்ட பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும். மேலும் குடிநீர் பிரச்சினை உள்ள பகுதிகளை கண்டறிந்து உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
ஆய்வு
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கல்யாண சுந்தரம், பொன்னம்பலம், ஒன்றிய பொறியாளர்கள் சரவணன், சாமிதுரை, ராஜசேகர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோசப் ஆனந்தராஜ், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் இளங்கோவன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து க.செல்லம்பட்டு கிராமத்தில் ரூ.9 லட்சம் செலவில் நடைபெற்று வரும் குடிநீர் கிணறு தூர்வாரும் பணியை மாவட்ட திட்ட இயக்குனர் மகேந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பல்வேறு கிராமங்களில் நடைபெறும் கிணறுகள் தூர்வாரும் பணியையும் அவர் ஆய்வு செய்தார்.