கண்ணமங்கலம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை
கண்ணமங்கலம் அருகே உள்ள மேல்வசந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பழனி, இவருடைய மகன் சத்யராஜ் (வயது 24).
கண்ணமங்கலம்,
கண்ணமங்கலம் அருகே உள்ள மேல்வசந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பழனி, இவருடைய மகன் சத்யராஜ் (வயது 24). 10–ம் வகுப்பு வரை படித்துள்ள சத்யராஜ் அவரது சொந்த நிலத்தில் விவசாய வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 8–ந் தேதி காலை சத்யராஜ் வீட்டில் இருந்தார். இதைக்கண்ட அவரது தாய் செல்வி ‘நிலத்துக்கு வேலை செய்ய போகாமல், ஏன் வீட்டில் சும்மா இருக்கிறாய்’ என்று சத்யராஜை திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த சத்யராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதைக்கண்ட அவரது உறவினர்கள் சத்யராஜை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை சத்யராஜ் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கண்ணமங்கலம் சப்–இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.