உணவுபொருட்களின் தரம் பற்றி ‘வாட்ஸ்–அப்’பில் புகார் தெரிவிக்கலாம் கலெக்டர் ராஜேஷ் தகவல்

கடலூர் மாவட்டத்தில் உணவு வணிகர்கள், உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவுகள் பெறுவதற்கு உணவு பாதுகாப்பு துறையின் மூலம் விழிப்புணர்வு கூட்டங்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.

Update: 2017-05-12 22:45 GMT

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் உணவு வணிகர்கள், உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவுகள் பெறுவதற்கு உணவு பாதுகாப்பு துறையின் மூலம் விழிப்புணர்வு கூட்டங்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டு ஒன்றுக்கு கொள்முதல் ரூ.12 லட்சத்துக்கு கீழ் தொழில் செய்யும் உணவு வணிகர்கள் இ–சேவை மையங்கள் மூலமாக பதிவு சான்றை பெற்றுக்கொள்ளலாம்.

உணவு பாதுகாப்பு உரிமம் பெற www.foodlicensing.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். உணவுபொருட்களின் தரம் குறித்தான புகார்களை தெரிவிக்க 9444042322 என்ற புதிய ‘வாட்ஸ்–அப்’ எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கோடைகாலங்களில் கார்பைடு கல்லை பயன்படுத்தி பழுக்க வைத்து விற்பனை செய்யப்படும் மாம்பழங்கள், தரம் இல்லாத குடிநீர் பாட்டில்கள், பால் மற்றும் பால்பொருட்கள், அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் தொடர்பான புகார்களை வாட்ஸ்–அப் மூலம் தெரிவிக்கலாம்.

மேற்கண்டவாறு கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்