கொதிகலனில் இருந்து அலுமினிய குழம்பு சிதறியதில் தொழிலாளி சாவு
கொதிகலனில் இருந்து அலுமினிய குழம்பு சிதறியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான அலுமினிய கட்டிகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் அலுமினிய கட்டிகள் வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
மேற்கண்ட தனியார் தொழிற்சாலையில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த பிரிஜேஷ் (வயது 36) மற்றும் சுதர்சன் (22) ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். நேற்று முன்தினம் மாலை தொழிற்சாலையில் உள்ள கொதிகலனில் கொதித்து கொண்டிருந்த அலுமினிய குழம்பு திடீரென அதிக அழுத்தத்தில் கொதிகலனை விட்டு வெளியே சிதறியது.
சாவு
இதில், கொதிகலன் அருகே வேலை செய்து கொண்டிருந்த பிரிஜேஷ் மற்றும் சுதர்சன் ஆகியோர் மீது அலுமினிய குழம்பு கொட்டியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரிஜேஷ் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு தொழிலாளி சுதர்சன் கவலைக்கிடமான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுடலைமணி தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.