ஓட்டப்பிடாரம் அருகே ரூ.2 கோடி செலவில் தார்சாலை அமைக்கும் பணி சுந்தர்ராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

ஓட்டப்பிடாரம் அருகே ரூ.2 கோடி செலவில் தார்சாலை அமைக்கும் பணியை சுந்தர்ராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

Update: 2017-05-11 21:00 GMT

ஓட்டப்பிடாரம்,

ஓட்டப்பிடாரம் அருகே ரூ.2 கோடி செலவில் தார்சாலை அமைக்கும் பணியை சுந்தர்ராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

ரூ.2 கோடி

ஓட்டப்பிடாரம் தாலுகாவில் ரூ.2 கோடியே 5 லட்சம் செலவில் வடக்குபரும்பூர்– குறுக்குசாலை, ஓசநூத்து– பசுவந்தனை சாலை, சில்லாநத்தம்– புதியம்புத்தூர் சாலை, ஓட்டப்பிடாரம்– வெள்ளாரம்– கச்சேரிதளவாய்புரம் சாலை, மணியாச்சி– ஒட்டநத்தம், கே.கைலாசபுரம்– நாரைக்கிணறு சாலை ஆகிய சாலைகள் புதிதாக அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை பணி தொடக்க விழா ஓட்டப்பிடாரம் மெயின் பஜாரில் நடந்தது. விழாவுக்கு தூத்துக்குடி நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். உதவி கோட்ட பொறியாளர் சேகர் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. சுந்தர்ராஜ் கலந்து கொண்டு சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்து பேசினார்.

நடவடிக்கை

அப்போது, ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பல சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. இந்த சாலைகளை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஓட்டப்பிடாரத்தில் கோர்ட்டு அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பஸ்நிலைய பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் விஜயசுரேஷ்குமார், கீழமுடிமண் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் சண்முகவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்