வைகை ஆற்றில் மணல் அள்ளிய டிரைவர்கள் உள்பட 6 பேர் கைது 2 லாரிகள் பறிமுதல்
சோழவந்தான் அருகே வைகை ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
சோழவந்தான்,
மேலக்கால் வைகை ஆற்றுப்பகுதியில் காடுபட்டி போலீஸ் நிலைய சப்–இன்ஸ்பெக்டர் கெலிஸ்டஸ் ராஜ்குமார் தலைமையில் போலீசார் ரோந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது லாரிகள் மூலம் அனுமதியின்றி ஒரு கும்பல் மணல் அள்ளிக்கொண்டு இருந்தனர்.
அந்த கும்பல் போலீசார் வருவதை கண்டதும் ஆற்றில் வளர்ந்து இருந்த நாணலுக்குள்மறைந்து தப்பி ஓடிவிட்டது.
இதையடுத்து மணல் அள்ள பயன்படுத்திய 2 லாரிகளையும் பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.
கைது
இதில் லாரி டிரைவர்கள் தேங்கில்பட்டியை சேர்ந்த பிரபு, அனுமந்தன்பட்டியை சேர்ந்த துரைப்பாண்டி மற்றும் மூர்த்தி, நாகன், காந்தி, மற்றொரு பிரபு ஆகியோர் மணல் அள்ளியது தெரியவந்தது. இதையடுத்து 6 பேரையும் கிள்ளிமங்கலம் பகுதியில் போலீசார் பிடித்து வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.