கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் குடிநீர் திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

கிருஷ்ணகிரி ஒன்றியம் கட்டிகானப்பள்ளி ஊராட்சி சத்யசாய் நகர் பகுதியில் 750 குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம்

Update: 2017-05-11 22:45 GMT

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி ஒன்றியம் கட்டிகானப்பள்ளி ஊராட்சி சத்யசாய் நகர் பகுதியில் 750 குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் வகையில் ரூ. 11 லட்சத்து 51 ஆயிரத்து 454 மதிப்பில் புதிய ஆழ்துளைகிணறு, மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி மற்றும் புதிய குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் திட்ட பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் கதிரவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடவேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர் சங்கரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஞானபிரகாசம், ராஜசேகரன், உதவி பொறியாளர் தீபமணி, செயலாளர் மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்