ஆம்பூர் அருகே தூக்குப் போட்டு தொழிலாளி தற்கொலை

ஆம்பூர் அருகே துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 33), கூலி தொழிலாளி.

Update: 2017-05-11 22:15 GMT

ஆம்பூர்,

ஆம்பூர் அருகே துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 33), கூலி தொழிலாளி. இவரது மனைவி பிரவினா. இவர்களுக்கு 2 மகனும், ஒரு மகளும் உள்ளனர். ராஜ்குமாருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன்– மனைவிக்கு இடையே தகராறு இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்படவே பிரவினா தனது குழந்தைகளுடன் அதே ஊரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் மனவேதனையில் இருந்த ராஜ்குமார் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து உமராபாத் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்